சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கைப்பதிவில், 'கரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், மூன்றாம் கட்ட ஊரடங்கு வரை நமக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். இந்நிகழ்வு நம் அனைத்துக் குழுவினரின் பணியால் சாத்தியமாகியுள்ளது.
இதன்மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராவோம்' எனத் தெரிவித்துள்ளார். அவரின் அந்த நெகிழ்ச்சியான பதிவில், 'பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் மறு பயன்பாட்டிற்கான தண்ணீரை சுமார் 10 எம்.எல்.டி வரை சுத்திகரிப்பு செய்துள்ளோம்.
பெரும்பாக்கம், அயனாம்பாக்கம், பெருங்குடி மற்றும் ரெட்டேரிப் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை செய்துள்ளோம். பள்ளிக்கரணை, நெற்குன்றம், வளசரவாக்கம் உள்ளிட்ட 10 பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளோம்.