தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஊரடங்கு: மார்ச் 22ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து!

சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 22ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

metro-trains-will-not-run-on-march-22
metro-trains-will-not-run-on-march-22

By

Published : Mar 20, 2020, 6:05 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

இத்தகையச் சூழலில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, மார்ச் 22ஆம் தேதி மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையேற்று தமிழ்நாட்டில் பால் விநியோகம் மார்ச் 22ஆம் தேதி நிறுத்திவைக்கப்படும் என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் அறிவித்தது. தற்போது பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை வீட்டிலேயே இருக்கச் செய்யும் நோக்கில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையை ரத்து செய்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. கரோனாவை எதிர்த்து போராடவும், மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details