சென்னை: விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காரணமாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 21ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களின்படி சென்னை மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மறு உத்தரவு வரும் வரை சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
விடுமுறை நாட்களில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை! - metro rail chennai
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல் நேரத்தில் தகுந்த இடைவெளியைக் கண்காணிப்பதற்காகத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தகுந்த இடைவெளி குறித்த குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் இந்தக் குறியீடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
அனைத்து பயணிகளும் முகக்கவசத்தை சரியாக அணிந்துள்ளனரா என்பதை கண்காணிக்க குழுக்களையும் நியமித்துள்ளது. 21.06.2021 முதல் 24.06.2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 13 பயணிகளிடமிருந்து அபராதமாக 2600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு- எவை அனுமதி, அனுமதியில்லை- முழு விவரம்!