தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயிலில் 3.81 கோடி பேர் பயணம்: மெட்ரோ நிர்வாகம் - பயணம் செய்தோர் எண்ணிக்கை

சென்னை: மெட்ரோ ரயிலில் இதுவரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்

By

Published : May 15, 2019, 7:58 PM IST

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. சேவை தொடங்கிய நாள் முதல் இதுவரை சென்னையில் உள்ள மக்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியை தந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

பயணிகள் கூட்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்களையும் பராமரிப்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details