சென்னை:மத்திய அமைச்சர் கிஷண்ரெட்டி சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் செய்து வரக்கூடிய இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘பரந்தூர் விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் துவங்கப்பட உள்ளது. எனவே, நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசு முடிவு செய்யும்.
இரண்டாவது புதிய விமான நிலையம் தேவையா இல்லையா என்பதை நீங்களே கூறுங்கள்' எனக் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம் வரை நிச்சயமாக மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும், தலைநகரில் மட்டுமில்லாமல் இரண்டாம் தலைநகரையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
தென் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதை தேர்தல் வெற்றிக்குப் பிறகு தெரிவிக்கிறேன். தாஜ்மஹாலை விட மகாபலிபுரத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதாக கிடைத்திருக்கக்கூடிய தகவல் குறித்து ஆய்வு செய்து மகாபலிபுரம் மேம்பாடு குறித்து முடிவெடுக்கப்படும்' எனக் கூறினார்.
இதனையும் படிங்க:பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?