உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் யோகா தினத்தைக் கொண்டாட பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ராஞ்சியில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா செய்ய இருக்கிறார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு! - world yoga day
சென்னை: உலக யோகா தினத்தையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் நான்கு நாட்கள் யோகா பயிற்சி நடைபெறும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நான்கு நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற 20ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை எட்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோகா பயிற்சியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் தவிர பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உட்பட அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயன் அடையலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 41 ஆண்டுகள் அனுபவம் பெற்ற யோகா ஆசான் சுத்தவெளிசபை தனசேகரன் இந்த யோகா பயிற்சியினை அளிக்க இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.