தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயில்: சென்னையில் வேகம் எடுக்கும் சுரங்கம் தோண்டும் பணிகள்! - second phase of the metro rail project in Chennai

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணியில், 40 கி.மீ., மேல் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான சுரங்கம் அமைக்க்கும் பணி வேகம் எடுத்துள்ளது. மேலும், கூவம் ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிகளை குறித்து விவரிக்கிறது இச்செய்தி குறிப்பு.

மெட்ரோ ரயில்: சென்னையில் வேகம் எடுக்கும் சுரங்கம் தோண்டும் பணி!
மெட்ரோ ரயில்: சென்னையில் வேகம் எடுக்கும் சுரங்கம் தோண்டும் பணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 4:34 PM IST

சென்னை:மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ பணி நடைபெற்று வருகிறது. இதில், உயர்மட்ட பாதை பணியானது, தூண்கள் அமைக்கும் பணியானது இறுதி கட்டத்தை ஏட்டிய நிலையில், சென்னையில், பல்வேறு இடங்களான கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துபட்டு, மாதாவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கம் தோண்டும் பணியானது வேகம் எடுத்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும் பயன்பாட்டில் உள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி மாதவரம் முதல் சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று வழித்தடங்களான மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில் 40 கி.மீ. மேல் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், 76-கி.மீ உயர்மட்ட பாதையில், 80 ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும் இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனையும் அமைக்கபட்டு வருகிறது. இந்த பணிகள் எல்லாம் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில், தற்போது சுரங்கம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, கலங்கரை முதல் பூந்தமல்லி வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் பணி தொடங்கியது. இதற்கு முன்னதாக சென்னையை அடுத்த மாதாவரத்தில், சுரங்கம் தோண்டும் பணியானது முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, சேத்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு சிறுவாணி என்று பெயர் வைத்துள்ளனர். இதேபோல், சேத்துப்பட்டு தெற்கு - ஸ்டெர்லிங் சாலை - பாலாறு, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - பவானி, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - தாமிரபரணி, என்ற ஆறுகளின் பெயர்களை வைத்துள்ளனர்.

தற்போது, சிறுவாணி என்ற பெயரிடப்பட்ட இயந்திரம் தனது பணியை தொடங்கியது. இந்த இயந்திரம் 700-மீட்டர் வரை சுரங்கம் தோண்டும் பணியை செய்யும். மேலும், இந்த ஆறுகளின் பெயரிடப்பட்ட இயந்திரம் அனைத்தும், கூவம் ஆறு வழித்தடத்தில் அதாவது, கூவம் ஆறு அடியில், சென்று, சுரங்கம் அமைக்கும் பணியை செய்யும்.

மேலும் கூவம் ஆற்றில் தனது சுரங்கம் பணியை செய்யும் போது, சராசாரியாக 21.மீ ஆளத்தில் அதாவது, 60-அடிக்கு கீழ் சுரங்கம் தோண்டும் பனி செய்யும், அதேப்போல், இடத்திற்கு ஏற்றது, போல் கூவம் ஆறு அடியில், ஆழத்தின் அளவு மாறுபடும். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனமானது, இந்த பாதையில், சுரங்கம் தோண்டும் பணியின் போது ஒவ்வொறு 25.மீ துரத்திற்கும், மண் பரிசோதனை என்பது செய்யபடும் என்று மெட்ரோ ரயில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது,"இதில் 40 கி.மீ-க்கு மேல், பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, 4-ஆம் வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் உயர்மட்ட பாதையானது 40% முடிவடைந்த நிலையில், தற்போது கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் தோண்டும் பணியானது இந்த மாதத் தொடக்கத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தூரத்தில், 9 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

நான்காம் வழித்தடத்தில், சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், கட்சேரி சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக செல்கிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப் பாதை பகுதிகள் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பணியானது நடைபெற்று வருகிறது.

அடையாறு:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது” என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கருணை அடிப்படிப்படையில் வேலை கேட்போருக்கு கருணை காட்டுங்கள் - சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்குபிடி!

ABOUT THE AUTHOR

...view details