சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 6) ஒரே நாளில் 2ஆயிரத்து 743 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று (ஜூலை 7) முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னையில் சமீபத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.