சென்னை:கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை இயல்படை விட 40 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகதில் பெரும்பாலன இடத்திலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதம்பரத்தில், 8.செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இதன் காரணமாக அடுத்த 3- தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கனமழை பொருத்தவரை அடுத்த 24- மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில், கன மழை முதல் மிக கன மழைக்கும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.