தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: திண்டுக்கல், நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Heavy rain alert in tamilnadu six districts

By

Published : Oct 3, 2019, 5:58 PM IST

கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரியின் அநேக இடங்களில் வறண்ட நிலையிலேயே காணப்படும் என்றும்,

தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல், நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

மிரட்டும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிகார்!

ABOUT THE AUTHOR

...view details