தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக வெப்பம் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல் - meteorological centre
சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இந்த நிலை ஜீன் மாதத்தின் தொடக்க காலம் வரை நிலவும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் எனவும், அதிகமாகவோ அல்லது குறைவான அளவிலோ இருக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 96 விழுக்காடு மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.