சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.6) வெளியிட்ட தகவலில், “தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத்தொடர்ந்து, கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும், அடுத்து வரும் நாட்களில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு:தற்போது, மேகங்கள் கிழக்கு நோக்கி நகருவதும், கீழடுக்கு சுழற்சி கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ உயரத்தில் இருப்பதால், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த பருவமழை..! ஆனாலும் இயல்பை விடக் குறைவு; வானிலை ஆய்வு மையம் தகவல்!