சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (மார்ச்1) முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வங்க கடலில் கடல் மட்டத்தில் நிலவும் எதிர் சுழற்சி (anticyclonic circulation) காரணமாக கடலோர பகுதிகளில் கிழக்கு திசையிலுருந்து குறைந்த வேகத்துடன் கூடிய ஈரக்காற்று வீசுவதால், கடலோர மாவட்டங்களின் ஓரு சில இடங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டர்) ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறையும் வெப்பம், அதிகரிக்கும் காற்று மாசு ; சமாளிக்குமா தலைநகர் டெல்லி?