தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உருவாகிறது புதிய புயல் - மக்களே உஷார் - உருவாகிறது புதிய புயல்

வடமேற்கு வங்க கடலில் வரும் ஜூலை 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை  மழை நிலவரம்  rain  rain update  chennai metrological center  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  மழை பெய்ய வாய்ப்பு  இன்று தமிழகத்தில் மழை  meteorological center  வாணிலை ஆய்வு மையம்  வாணிலை  இந்திய வாணிலை ஆய்வு மையம்  உருவாகிறது புதிய புயல்  புதிய புயல்
புதிய புயல்

By

Published : Jul 18, 2021, 10:04 AM IST

வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், ஜூலை 21 ஆம் தேதி கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த இரு தினங்கள் (19,20) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல்

ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் கவனத்திற்கு

ஜூலை 20 ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல்

ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி!

ABOUT THE AUTHOR

...view details