சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 30 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்றுள்ளது. வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது இது வட தமிழக கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1150 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை உள் புயலாகவும் நாளை தீவிர புயலாகவும் இது வலுப்பெறக் கூடும்.
இதுதொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும். மழையை பொருத்தவரை வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 3 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மீனவர்கள் இன்றும் நாளையும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும், வரும் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும், என்றார்.