சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.