சென்னை:வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழ்நாட்டில் (3.1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஜூன் 1) தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன் 2:தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .
ஜூன் 3, 4: வட தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 5: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு பகல் பொழுதில் வானம் தெளிவாகவும், மாலை-இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு
- பள்ளிப்பட்டு (திருவள்ளூர் ) - 5 செ.மீ.
- ஹரூர் (தர்மபுரி ) - 4 செ.மீ.
- குடியாத்தம் (வேலூர் ) -3 செ.மீ.
- கள்ளிக்குடி (மதுரை), சின்னக்கல்லார் (கோவை), கொடைக்கானல் போன்ற பகுதிகளில் தலா 2 செ.மீ.
- உதகமண்டலம், பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), விரிஞ்சிபுரம் (வேலூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), தல்லாகுளம் (மதுரை) உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
- ஜூன் 1 முதல்ஜூன் 3 வரை: குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- ஜூன் 1 முதல்ஜூன் 3 வரை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
- ஜூன் 1 முதல்ஜூன் 5 வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ஆன்லைன் காதலியால் பாகிஸ்தான் சிறையில் மாட்டிய இந்திய இளைஞர் விடுவிப்பு!