தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உஷார்... தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இயல்பைவிட அதிகரிக்கும் வெப்பநிலை! - 2 to 3 degrees Celsius above normal temperature

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Met Dept
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Apr 17, 2023, 2:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இன்றும் (ஏப்ரல் 17), நாளையும் (ஏப்ரல் 18) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கீழ்பெண்ணாத்தூர் அம்புஜவல்லி கோயிலில் 27 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவம்!

ABOUT THE AUTHOR

...view details