தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - Rain forecast

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம்
மழை நிலவரம்

By

Published : Dec 8, 2020, 4:36 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (மழைபெய்த விவரம் சென்டிமீட்டரில்) கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 7, ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கடலூர் தலா 6, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), நெய்வேலி, வந்தவாசி (திருவண்ணாமலை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்) தலா 5, கொள்ளிடம், பாபநாசம் (திருநெல்வேலி), திருத்தணி (திருவள்ளூர்) , சிதம்பரம் (கடலூர்), திருமங்கலம் (மதுரை), குடியாத்தம் (வெள்ளூர்), குடவாசல் (திருவாரூர்), புதுச்சேரி, உத்திரமேரூர் (காஞ்சிபுரம் ), விரிஞ்சிபுரம் (வேலூர்), உத்தமபாளையம் (தேனி) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:துாத்துக்குடியில் கனமழை: மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்!

ABOUT THE AUTHOR

...view details