தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடையை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் சாலை மறியல் - etv bharat

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்சி ரோட்டிலுள்ள வியாபாரிகள் கடையை திறக்க அனுமதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் சாலை மறியல்
வியாபாரிகள் சாலை மறியல்

By

Published : Aug 4, 2021, 10:54 PM IST

சென்னை: கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒன்பது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அரசு அறிவித்தது.

வண்ணாரப்பேட்டை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சிங்கார தோட்டம் என்.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரெடிமேட் கடைகளை திறந்து வியாபாரம் செய்வதை மாநகராட்சி அலுவலர்கள் கண்ட கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

வியாபாரிகள் சாலை மறியல்

இந்நிலையில் எம்சி ரோட்டிலுள்ள வியாபாரிகள் கடையை திறக்க அனுமதி கோரி சிமெட்ரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் பூபாலன் தலைமையிலான காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு வாரம்: இலவச சித்த மருந்துகள் விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details