ஆலந்தூர் ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்டவைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை என்ற பெயரில் சரியான காரணங்கள் இல்லாமல் ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் கட்ட வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆலந்தூர் மண்டல அலுவலர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று (செப்.16) நேரில் சென்று கோரிக்கைவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வியாபார சங்கப் பேரவைத் தலைவர் முத்துக்குமார், "கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் கரோனா என்ற கொடிய வைரஸ் தாக்கத்தினால் மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிமுறையை நடைமுறைப்படுத்தியது.
கரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது அதன்பிறகு அத்தியாவசியப் பொருட்களை விற்கும் மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.
இதையடுத்து அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடை வியாபாரிகள் அரசு விதித்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மாநிலம் முழுவதும் கடைகளைத் திறந்தனர். தற்பொழுது முழு ஊரடங்கு 90 விழுக்காடு தளர்வு செய்யப்பட்ட நிலையில், அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
நகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை இந்நிலையில் ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்டவைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை என்ற பெயரில், ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வற்புறுத்தி வருகின்றனர். மளிகை மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு இது போன்ற மன உளைச்சல்களை நகராட்சி அலுவலர்கள் ஏற்படுத்துவது நல்லதல்ல.
எனவே ஆலந்தூர் மண்டல அலுவலர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதுபோன்று தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் நடந்து கொண்டால் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆலந்தூர் மண்டலம் உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டுசெல்வோம்" என்றார்.
இதையும் படிங்க:ரேஷன் கடையை சூறையாடிய யானைக் கூட்டம்!