இது குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பிதற்காக முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக இன்னமும் குறிப்பாக தென் மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் கடையைத் திறந்திருந்தால் காவல் துறையினர் மூடச் சொல்வதாக வணிகர்கள் சிலர் குற்றம்சாட்டும் செய்தி தனக்கு வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
அது தொடர்பாக காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்துப் பேசியதில், ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், இனி காவல் துறையால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்ததாக விக்கிரமராஜா தெரிவித்தார்.
கடைகளுக்கு முழு நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் - வணிகர் சங்கம் கோரிக்கை இதே நிலைமை தொடர்ந்தால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும்,மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வணிகர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.