சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய ஐந்தாவது கேட் பழைய விமான நிலையத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுவா் ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்படை போலீசார், அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுவர் ஏறி குதித்த இளைஞர்; நடந்தது என்ன? - சென்னை விமான நிலைய செய்திகள்
சென்னை: மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பகுதியில் சுவர் ஏறி குதித்த ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
mentally retarded wall climed at chennai airport
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த சாகித்(25) என தெரியவந்தது. இவர் சென்னை விமான நிலையத்தில் குதிக்க முயன்றது ஏன்? என்று அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றதில், இவர் ஒரு மனநோயாளி என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவரை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக சென்னை விமான நிலைய காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.