சென்னை:தமிழ்நாடு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனையடுத்து, ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சைபர் கிரைம் காவலர்களின் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல்விடுத்த செல்போன் எண்ணை ஆய்வுசெய்தபோது வடபழனியைச் சேர்ந்த பெண் ஒருவருடையது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கு சென்று விசாரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவர் முருகன் மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெற்றுவருவதும், அவரைச் சந்திக்கச் சென்றபோது மனைவியின் செல்போனிலிருந்து முருகன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
மனநலக் காப்பகத்திலிருந்து தன்னை வீட்டிற்கு மனைவி வீட்டிற்கு அழைத்துச் செல்லாததால் இதுபோன்ற செயலில் முருகன் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, காவல் துறையினர் அந்த நபரை எச்சரித்துச் சென்றனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு?