தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் நிலைய தூண் மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பத்திரமாக மீட்பு..!

Chennai Metro: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பு பால தூணின் நுணியில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 9:43 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய தூண் மற்றும் இணைப்பு பாலம், நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த பாதைக்கு யாரும் எளிதில் போய்விட முடியாது. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்த சிறிய இடைவெளியில் புகுந்து ஆபத்தான நிலையில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பாதுகாவலர்கள் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மேலாளர், உடனடியாக அவரை கீழே இறங்க சொல்லி அழைத்தும் அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீஸார்களும், தீயணைப்புத் துறையினரும், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய நகரும் படிக்கட்டுகள் அருகிலிருந்து ஒரு சிறிய இடைவெளியைப் பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: கொலை செய்ய மதுபானக் கடை அருகே காத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார்!

மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக, கே-11 (சி.எம்.பி.டி) காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எப்படி, மேலே சென்று அந்த சிறிய இடைவெளியில் அமர்ந்திருந்தார் என்று காவல் துறையினரும், மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் எப்படி வந்தார் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும், இது குறித்து சில ஊடகங்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய நகரும் படிக்கட்டில் தவறி விழுந்து இந்த நபர் சிக்கிக்கொண்டார் என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது முற்றிலும் தவறானது, அவர் நகரும் படிக்கட்டுகள் அருகில் உள்ள பாதையில் தவறாக விழுந்து அவர் சிக்கிக்கொள்ளவில்லை. அவர் அந்த இணைப்பு தூணில் மற்றும் நகரும் படிக்கெட்டுகள் இடையே இருக்கும் சிறு இடைவெளியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்துள்ளார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மெட்ரோ ரயில் நிலைய கட்டுபாட்டாளர் தகவலின் படி தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை இணைந்து அவரை மீட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கண்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத காணி பழங்குடி விவசாயி.. வன விலங்குகளுடன் தனி ஆளாக வாழும் அதிசயம்!

ABOUT THE AUTHOR

...view details