மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஜூலை 29) கையெழுத்திடப்பட்டுள்ளது. மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான மின்சக்தி நிதி நிறுவனம், கான்பூர் இந்திய தொழில்நுட்பப் பயிலகத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பப் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து! - புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்காக, கான்பூர் இந்திய தொழில்நுட்பப் பயிலகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Memorandum of Understanding for Power Supply System Technical Training
இதன்படி, மின்சக்தி நிதி நிறுவனம் தனது சமுதாயக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2 கோடியே 38 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக கான்பூர் தொழில்நுட்பப் பயிலகத்திற்கு அளிக்கவுள்ளது. மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, இந்திய தொழில்நுட்பப் பயிலகத்திற்கு உதவி செய்வதுதான் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்று மின்சக்தி நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர். முரஹரி தெரிவித்துள்ளார்.