தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி நிலையங்களில் பாலியல் வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை - இந்திய மாணவர் சங்கம் - karur school girl suicide

Sexual offences : கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

By

Published : Nov 24, 2021, 4:50 PM IST

சென்னை:வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் SFI :(Students Federation of India) சார்பில் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (நவ.24) நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் ஜான்சிராணி, "கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாலியல் வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்முறையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details