சென்னை:தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மன நல ஆலோசனை மையத்தை மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. நீட்தேர்வை இரண்டு முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்படும்.
19ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
108 சேவை தொடங்கி 13 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த நாள்களில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அது 19ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.