சென்னை:தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், 28.9 லட்சம் பேர் அன்றைய தினம் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் கடந்த வாரம் ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இதில், 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16.4 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.