தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து திருச்சியில் 21ஆம் தேதி கூடி முடிவு! - 5ஆயிரத்து 68 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17 (பி) குற்ற குறிப்பாணை

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து திருச்சியில் வருகின்ற 21ஆம் தேதி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jacto geo
jacto geo

By

Published : Jan 8, 2021, 8:11 PM IST

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டம் நடத்தினர். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பினர்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஐந்தாயிரத்து 68 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், கே.பி.ஓ. சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தலைமை ஏற்றனர்.

ஜாக்டோ ஜியோ தீர்மானம் நிறைவேற்றம்

டிசம்பர் மாதம் 28, 29, 30 ஆகிய நாள்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முறையீடு செய்தோம். இதுநாள்வரை தமிழ்நாடு அரசு ஐந்தாயிரத்து 68 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17 (பி) குற்ற குறிப்பாணைகளை ரத்துசெய்வது, காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை ரத்துசெய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை.

ஜாக்டோ ஜியோ அமைப்பு

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பங்களிப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்துசெய்து அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வெல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து உயர்மட்டக்குழு வருகின்ற 21ஆம் தேதி திருச்சியில் கூடி முடிவுசெய்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமானத்தில் முதல்முறையாக தமிழில் அறிவிப்பு: சேலம் விமானிக்கு முதலமைச்சர் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details