சென்னை:நீதிமன்ற வழக்குகளின் விசாரணையை தீவிரப்படுத்தவும், நீண்டகாலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது தொடர்பான, ஆலோசனை கூட்டம் நீதிமன்ற நடுவர் கோதண்டராஜ் முன்னிலையில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றது.
நிலுவையிலுள்ள வழக்குகளை தீர்க்க நீதிமன்ற நடுவரிடம் காவல் அலுவலர்கள் ஆலோசனை - chennai
வழக்குகளை விரைந்து முடிக்கவும், விசாரணையை தீவிரப்படுத்தவும் நீதிமன்ற நடுவர், வழக்கறிஞர்களிடம் காவல் துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன், திருவள்ளூர், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள், காவல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளில் உரிய முன்னேற்றம் காணவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை ஆய்வு செய்து துரிதமாக முடிப்பது குறித்தும் வழக்கறிஞர்களிடம் காவல் அலுவலர்கள் கேட்டறிந்தனர்.
இதுமட்டுமில்லாமல் மத்திய குற்றப்பிரிவில் உள்ள முக்கியமான வழக்குகளின் விவரங்கள், நீதிமன்றத்தில் நடந்து வரும் முக்கிய வழக்குகளின் விவரங்கள் குறித்தும் அவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டன.