தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை - actorss vanitha

சென்னை: இரண்டாவது கணவரின் குழந்தையை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தெலங்கானா காவல்துறையினர், அவரை கைது செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

நடிகை வனிதா

By

Published : Jul 3, 2019, 12:16 PM IST

நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவருக்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 2012ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகளை, தந்தை ஆனந்தராஜிடம் இருக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து மகள் ஜோவிதா ஆனந்தராஜ் ஆகியோர் தெலங்கானாவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் மகள் ஜோவிதாவை, வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனயைடுத்து ஆனந்தராஜ் தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட அம்மாநில காவல்துறையினர் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து தற்போது வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், அவரை கைது செய்ய உதவுமாறு நாசரேத் காவல்துறையினரிடம் தெலங்கானா காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற நாசரேத் காவல்துறையினர், தெலங்கானா காவல்துறையினருடன் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தவே தெலங்கானா காவல்துறையினர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மற்றொரு போட்டியாளரான நடிகை மீரா மிதுன் மீதும் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details