நடிகர் மீரா மிதுன் கடந்த சில நாள்களுக்கு முன்பு பட்டியலின மக்களை இழிவாகப் பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அது பெரும் சர்ச்சை கிளப்பியதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு அஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
ஆனால் நேரில் ஆஜராகாத மீரா, தன்னை யாரும் கைது செய்திட முடியாது எனக் கூறி அன்றைய தினமே வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மீரா மிதுனை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சனிக்கிழமை (ஆக.14) கேரளாவில் வைத்து கைது செய்து, நேற்று (ஆக.15) சென்னை அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும் மீரா மிதுனுக்கு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஷாம் அபிஷேக் என்பவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இவரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்