தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிலிருந்தபடியே மருந்துகளை வாங்க கட்டணமில்லா எண் - அமைச்சர் விஜயபாஸ்கர் - மருந்துகள் வாங்க கட்டணமில்லா எண்

சென்னை: மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

vijayabashkar
vijayabashkar

By

Published : Apr 15, 2020, 10:23 AM IST

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "அரசின் அறிவுரைப்படி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் நோக்கத்திலும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையிலும் மக்களின் அத்தியாவசிய பொருள்களான மருந்துகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள 18001212172 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகம் செய்கிறோம்.

இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள மருந்து வணிகர்கள், கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்குவர்.

வீட்டிலிருந்தபடியே மருந்துகளை வாங்க கட்டணமில்லா எண் அறிவிப்பு

இதனை பெறுவதற்கு மருத்துவரின் மருந்துச்சீட்டு அவசியமாகும். மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: வரிசையாக இருக்கைகள் அமைத்து மருந்துகள் வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details