சென்னை:கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக காவல் துறை தலைமை இயக்குநர்சங்கர் ஜிவால் அறிவித்திருந்த நிலையில் தற்போது சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுகிர்தா (27). இவர் கடந்த 6-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது அறையிலிருந்து கிடைத்த கடிதத்தில் இறப்புக்கான காரணம் எனத் தலைப்பிட்டு 3 பேரின் பெயர்களைக் மாணவி குறிப்பிட்டிருந்தார்.
அதில் பரமசிவன் என்ற பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், டாக்டர் ஹரீஷ் என்ற சீனியர் மாணவர் மற்றும் டாக்டர் பிரீத்தி என்ற சீனியர் மாணவி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மகளின் இறப்பு செய்தியை கேட்டு தூத்துக்குடியிலிருந்து வந்த மாணவி சுகிர்தாவின் தந்தை, மகளின் இறப்பு குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் (அக். 6 ஆம் தேதி இரவு) புகார் அளித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்!