தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ மாணவர் சேர்க்கை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு - மருத்துவ மாணவர் சேர்க்கை உள்ஒதுக்கீடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Jul 14, 2020, 6:36 PM IST

Updated : Jul 14, 2020, 10:43 PM IST

18:33 July 14

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்தார்.

நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் எஸ் பி வேலுமணி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.  கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி ஆகிய அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மேலும் தனிப்பட்ட காரணத்தால் அமைச்சர் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் நிலோபர் கபில் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

இதையும் படிங்க:ராஜஸ்தான், முதலமைச்சர் வீட்டில் மாலை 7.30 மணிக்கு அவசரக் கூட்டம்

Last Updated : Jul 14, 2020, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details