தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மருந்தகங்கள் 11 மணிக்கு மேல் வழக்கம்போல் செயல்படும் - சென்னையில் மருந்தகங்கள் அடைப்பு

சென்னை: சென்னையில் மருந்தகங்கள் 11 மணிக்கு மேல் வழக்கம்போல் செயல்படும் என்று மருந்தக வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical shop owners association
மருந்தகங்கள் 11 மணிக்கு மேல் வழக்கம்போல் செயல்படும்

By

Published : Jun 26, 2020, 10:27 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகன் சிறையில் உயிர் இழந்ததற்கு நீதி கேட்கும்விதமாக இன்று ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்புக்கு வணிகர்கள் சங்கப் பேரமைப்பு அழைப்புவிடுத்திருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக மருந்தக வணிகர்கள் சங்கத்தினரும் அடையாள போராட்டமாக இன்றுகாலை 7 மணி முதல் 11 மணிவரை மருந்தகங்களை மூடியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மருந்துக்கடை உரிமையாளர்கள் கடைகளை மூடியதால், நோயாளிகளும், பொதுமக்களும் மருந்துப் பொருள்களை வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 11 மணிக்கு மேல் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் என மருந்தக வணிகர்கள் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவில்பட்டி கிளைச்சிறையில் மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு

ABOUT THE AUTHOR

...view details