தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை.. சினிமா போன்று வாக்குமூலம் அளிப்பு! - Confession

Medical shop owner murder: தாம்பரம் அருகே மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை
சென்னையில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 8:38 PM IST

சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர், வினோத் (45). இவர் கஸ்தூரி என்ற பெயரில் இரண்டு மருந்துக் கடைகளை 10 வருடங்களாக அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.30) இரவு சுமார் 10.30 மணி அளவில் மருந்துக் கடையை மூடிவிட்டு, கடையின் அருகே உள்ள பேக்கரியில் தின்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் வினோத்தை வழிமறித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்து, வினோத்தின் தலை மற்றும் முகம் உள்பட உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்ததையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது குறித்து தகவலறிந்த மணிவாக்கம் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற பிரபல ரவுடி, வினோத்திடம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதால், வினோத் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்திடம் ரவுடி சிலம்பரசனின் கூட்டாளிகள் புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டியதாகவும், அதற்கு வினோத் புகாரை திரும்பப் பெற மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத் என்கின்ற கார்டன் சரத் (24) ஆகிய மூன்று பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, அவர்களிடம் நடத்தபட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ரவுடி சிலம்பரசன், வினோத்தை மாமுல் கேட்டு மிரட்டும் ஆடியோவை வெளியிட்டதால், தங்களை யாரும் மதிக்கவில்லை என்றும், வியாபாரிகளிடையே பயத்தை உண்டாக்க கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாடத் தயாராகும் சென்னைவாசிகளே.. காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details