தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக தனது ஆண்டுத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இதில்,"மருந்தாளுநர் உள்பட 27 பதவிகள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை உதவி நிபுணர்கள், ரேடியாலஜிஸ்ட், ஆடியோமெட்ரீசியன், உதவி பொது மருத்துவர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, நேச்சரோபதி உதவி மருத்துவர்களுக்கான பணியிடங்கள் குறித்து ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு மே, ஜூன் மாதங்களில் தேர்வு நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற மருத்துவப் பணியிடங்கள் குறித்த விவரங்களும், காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த விவரங்களும் இந்த ஆண்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்