தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை! - ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 14 நாள்கள் 144 தடை உத்தரவை நீட்டிக்கலாம் என மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Medical Expert committee recommended to TN Govt for extending the lockdown
Medical Expert committee recommended to TN Govt for extending the lockdown

By

Published : Apr 10, 2020, 6:33 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் கரோனா வைரஸ் தன்மை குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் விரிவாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மருத்துவக் குழு சார்பாக பேசிய பிரத்திப்கா, “தமிழ்நாட்டில் கரோனா பரவல் அரசால்சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எனவே 14 நாள்கள் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும், அடுத்து வரக்கூடிய நாள்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details