கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாதிப்பு தொடா்ந்து உச்சநிலையில் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருள்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீனாவில் இருந்து சென்னைக்கு வென்டிலேட்டர்கள் வருகை! - மருத்துவ உபகரணங்கள்
சென்னை: சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தன.
இந்நிலையில், சென்னை சா்வதேச விமானநிலைய சரக்ககத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானத்தில் 142 பாா்சல்களில் மருத்துவ உபகரணங்கள் வந்தன. அதில் 82 பாா்சல்களில் N-95 ரக முகக்கவசங்கள், மருந்து பொருள்கள் சவுதி அரேபியாவிலிருந்தும், 60 பாா்சல்களில் உயிா் காக்கும் சுவாச்கருவியான வென்டிலேட்டா்கள் தயாரிக்க தேவையான உதிரி பாகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்தும் வந்தன. மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சுங்கச் சோதனைகள் நடத்தி டெலிவரி செய்யப்பட்டன.
இதையும் பார்க்க: Cyclone Amphan: ஆறு மணிநேரத்தில் அதிதீவிரமாக மாறும் ஆம்பன் புயல்!