தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளிலிருந்து விமான நிலையத்திற்கு வந்த மருத்துவ உபகரணங்கள்! - medical equipments reach chennai airport

சென்னை: ஐந்து நாடுகளிலிருந்து முகக்கவசம், தெர்மாமீட்டர்கள், வென்டிலேட்டா் தயாரிக்கும் உதிரிப் பொருள்கள் போன்ற மருந்து பொருள்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தன.

medical equipments from foreign countries delivered in chennai airport
medical equipments from foreign countries delivered in chennai airport

By

Published : May 21, 2020, 2:33 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக அதிகளவில் நோய்த் தொற்று பரவுகிறது. இதனால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வந்த மருத்துவ உபகரணங்கள்

இதையும் படிங்க... கரோனா தொற்று ஆப்பிரிக்காவில் ஏழ்மையை அதிகரிக்கும் - ஐநா எச்சரிக்கை

தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களுக்குச் சிகிச்சையளிக்க வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருள்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான், சீனா ஆகிய ஐந்து நாடுகளிலிருந்து 228 பார்சல்களில் மருந்து பொருள்கள் வந்தன.

விமான நிலையத்திற்கு வந்த மருத்துவ உபகரணங்கள்

அவற்றில் முகக்கவசம், அதிநவீன தெர்மாமீட்டர்கள், உயிர் காக்கும் சுவாசக் கருவியான வென்டிலேட்டா் தயாரிக்கும் உதிரிப் பொருள்கள் உள்ளிட்ட மருந்து பொருள்கள் அதிகளவில் இருந்தன. இவை அவசர கால அடிப்படையில் உடனடியாக சுங்க சோதனைகள் நடத்தப்பட்டு டெலிவரி செய்யப்பட்டன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details