ஆந்திரா மாநிலம் சூலூரிலிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் இரண்டு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தன. அவற்றில், 1,070 கிலோ எடையுள்ள முகக்கவசங்கள், கரோனா தொற்று பரிசோதனை கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இருந்தன.
ஆந்திராவில் இருந்து சென்னை வந்தடைந்த மருத்துவ உபகரணங்கள் - medical equipment sent from andhra to chennai
சென்னை: ஆந்திரா மாநிலம் சூலூரிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர் மூலம் 1,070 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
சென்னை வந்தடைந்த மருத்துவ உபகரணங்கள்
அவற்றை விமானநிலைய ஊழியர்கள் இறக்கினா். இதன்பின்னர் விமானநிலைய அலுவலர்கள் மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். பின்பு அவை வேன்கள் மூலம் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!