தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்! - chennai latest news

சென்னை : ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தடைந்தது.

விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்
விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்

By

Published : Jun 3, 2021, 12:45 PM IST

கரோனா தொற்றின் இரணடாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக. ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பெருமளவு வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திரமாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் சென்னை விமானநிலையம் வந்தது. அதில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள், டிராலியுடன் இணைக்கப்பட்ட 25 வெண்டிலேட்டா்கள் , மருத்துவ உபகரணங்கள் வந்தன.

விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்
மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை விமானநிலைய அலுவலர்கள் அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.பின்னர் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல், ஜொ்மனியிலிருந்து நேற்று இரவு சென்னை வந்த சரக்கு விமானத்தில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன.அதனை சுங்கத்துறையினா் மருத்துவ உபகரணங்களுக்கான முன்னுரிமை அளித்து உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

ABOUT THE AUTHOR

...view details