தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த ஏப்ரல் மாதம் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள 765 பகுதிகளில் 22, 904 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கிராமங்கள், நகர்புறங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கரோனா எதிர்பாற்றல் சக்தி அதிகரிப்பு - மருத்துவ இயக்குநர் தகவல் - கரோனா எதிர்பாற்றல் சக்தி அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறித்தான சர்வேயில் 23 சதவீதம் பேருக்கு கரோனா எதிர்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 சதவீதம் பேருக்கும், குறைந்த பட்சமாக நாகப்பபட்டினத்தில் 9 சதவீதம் பேருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கரோனா தொற்றின் முதல் அலையின் போது அக்டோபர், நவம்பரில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிவதற்கான பரிசோதனை 22, 690 பேருக்கு நடத்தப்பட்டது . அந்த பரிசோதனையில் 6,995 பேருக்கு கரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்தது.
உடலில் எதிர்ப்பாற்றல் உருவாக 4 வார இடைவெளி போதுமானதாக உள்ளது. மூன்றாம் கட்ட நோய் எதிர்பாற்றல் பரிசோதனை ஆய்வு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.