சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் தணிகாச்சலம் என்பவர் கரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி மக்கள் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றார்.
கரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த மருத்துவர் மீது புகார்! - கரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த மருத்துவர் மீது புகார்
சென்னை: கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய போலி சித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவ இயக்குனர், ஹோமியோ துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
![கரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த மருத்துவர் மீது புகார்! சித்த மருத்துவர் மீது புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7065858-thumbnail-3x2-doctor.jpg)
இவர் மாநில, மத்திய அரசுகளாகல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி தகுதி, முறையான அங்கீகாரம் உள்ளிட்டவை இல்லாமல் செயல்பட்டுவருபவர். இது போன்ற தவறான செய்தியை பரப்பிய இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவ இயக்குனர், ஹோமியோபதி துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தவறான செய்தியை பரப்பியவர்வள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இது போன்ற தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: டிக்-டாக் மூலமா மாட்டிக்கிட்ட பங்கு... சினிமா பாடலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்!