தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்! - medical college dean transferred by health and family welfare department

சென்னை: மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பீலா ராஜேஷ்

By

Published : Nov 6, 2019, 10:47 PM IST

தமிழ்நாட்டில் திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் ஆகியப் பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்கு முதல்வர்கள் மற்றும் சிறப்பு அலுவலர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை நியமனம் செய்துள்ளது.

தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள்:

  • சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமால் பாபு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்
  • கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்
  • திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் புதிதாகத் தொடங்கப்பட உள்ள, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா, திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்

மேலும், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ அதிகாரிகள் பதவி உயர்வு மூலம் முதல்வராக நியமனம் செய்யப்படுகின்றனர். அதன் விவரங்கள்:

  • சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குந்தவை தேவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்
  • சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியை அல்லி, ராமநாதபுரம் புதிய மருத்துவக் கல்லூரிக்கான முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் பதிவு உயர்வு பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம்
  • காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முத்துகிருஷ்ணன் விருதுநகர் புதிய மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முருகேசன் கோயம்புத்தூர் தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சண்முகமணி பதவி உயர்வு பெற்று, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் திருவாசகமணி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பாலாஜி , செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா, திருப்பூர் மாவட்டம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுக் கல்லூரி மாணவர்கள் கையேட்டில் எம்.பி ஆன ஹெச். ராஜா...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details