நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கு வீட்டில் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத 11 மாவட்டங்களில் தமிழ்நாடு பொறியியல் உதவி சேவை மையங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மருத்துவக் கல்வி கூடுதல்இயக்குநர் செல்வராஜன், 'எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் பெறப்படுகிறது. காலை 11 மணிவரை 1,500 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, தனியார் மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தலாம் அல்லது வரைவோலையாகவும் (DD) எடுத்து அளிக்கலாம்.