தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியன் 2' படப்பிரச்சினையை தீர்க்க முடியவில்லை: இயக்குநர் ஷங்கர் தரப்பு பதில் - இந்தியன் 2 பட விவகாரம்

சென்னை: 'இந்தியன் 2' பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Indian
Indian

By

Published : Apr 28, 2021, 2:03 PM IST

நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'ஏப்ரல் 24ஆம் தேதி இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனம் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details