தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் விற்பனை விலை குறித்து ஊடங்களில் வரும் செய்து தவறானது-பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்!

சென்னை: ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியிருப்பதாக ஊடங்களில் வரும் செய்தி தவறானது என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் ஆ.பொன்னுசாமி குற்றஞ்சாடியுள்ளார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் ஆ.பொன்னுசாமி
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் ஆ.பொன்னுசாமி

By

Published : May 8, 2021, 10:43 PM IST

ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக ஊடங்களில் தவறான செய்தி வெளிவருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் என.ஆ.பொன்னுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், `தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், ஆவின் பால் விற்பனை விலையைக் குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து நேற்றிரவே (மே.7) அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. (அரசாணை எண் :- 60 / நாள் 07.05.2021)
அவ்வாறு அரசு பிறப்பித்த அரசாணையில், முந்தைய அரசின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வை சுட்டிக் காட்டி, அப்போது உயர்த்திய விற்பனை விலையான லிட்டருக்கு 6 ரூபாயிலிருந்து தற்போது 3 ரூபாய் விற்பனை விலையை குறைப்பதாகத் தெளிவாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதனை புரிந்துகொள்ளாத ஊடகங்கள் அதனை தவறாகக் கருதி, ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையையும் தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பதாக தவறாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்று(மே.8) காலை வெளியான முன்னணி நாளிதழ் ஒன்றில் கூட அது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. எனவே எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் தெளிவாக ஆராய்ந்து உண்மை அறிந்து செய்தி வெளியிடுமாறு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்` எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details